திருப்புத்துார்: திருப்புத்துார் அருகேதிருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் ஆனித் திருவிழா ஜூன்16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மலைக்கோயிலிருந்துஐம்பெரும் சுவாமிகளும் மலையடிவாரக் கோயிலில் எழுந்தருளினர். தினசரி காலையில் அபி ேஷகமும், இரவில் திருவீதி உலாவும் நடந்தது. நான்காம் திருநாளில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சார்பில் மண்டகப்படி தீபாராதனை நடந்தது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினர். 10:00 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் கிராமத்தினர் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. மதியம் 12:30 மணி அளவில் உணவு ஒய்வு விடப்பட்டது பின்னர் மாலையில் மீண்டும் வடம் பிடித்து தேர் நிலைக்கு வந்தது. இன்று காலை 9:00 மணிக்கு தீர்த்தம் வழங்குதலும், நாளை காலை 6:00 மணிக்கு சுவாமி மலைக்கோயில் எழுந்தருளலும் நடைபெறும்.