திருப்புவனம்:மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி அறநிலையத்துறை விருதுநகர் மண்டல உதவி ஆணையர் ஹரிகரன் தலைமையில் நடந்தது. உண்டியல்களில் 133 கிராம் தங்கம், 220 வெள்ளி, 14லட்சத்து 26 ஆயிரத்து 567 ரூபாய் ரொக்கமாக செலுத்தப்பட்டிருந்தது. மதுரை சத்திய சாய் சேவா சமிதி தொண்டர்கள் 63 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மடப்புரம் கோயில் உதவி ஆணையர் செல்வி தலைமையில் கண்காணிப்பாளர் பிரபாகரன், சிவகங்கை ஆய்வர் சங்கையா உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் உடனிருந்தனர்.