பதிவு செய்த நாள்
28
ஜூன்
2018
12:06
காரமடை: காரமடை அரங்கநாதர் கோவிலில் உள்ள துாண்களில் அலங்கார வேலை செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஏழுநிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணி செய்து, 2015, ஜூன், 7ல் மகாகும்பாபிேஷகம் செய்யப்பட்டது. ராஜகோபுர முன்மண்டபம், திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் நடைபாதை சுற்று மண்டபம் ஆகியவை கான்கிரீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள துாண்களில், எவ்வித அலங்கார வேலை பாடும் இன்றி உருண்டை வடிவில் உள்ளன. அதில், தாயார் சன்னதி முன்புள்ள திருக்கல்யாண மண்டபத்தில், 16 துாண்களுக்கு அலங்கார வேலையை நன் கொடையாக செய்து கொடுக்க, கோவையை சேர்ந்த ராமசாமி என்கிற பக்தர்முன் வந்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்தை தொடர்ந்து, துாண்களில் அலங்கார வேலை துவக்கப்பட்டு உள்ளது.