சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயிலில் ஆனித் தேரோட்ட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2018 10:07
காரைக்குடி: சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் நிர்வாகத்துக்கு உட்பட்ட சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனி விழா கடந்த ஜூன் 23–ம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. 9–ம் விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 11:00 மணிக்கு வீரசேகரர் பிரியாவிடை, உமையாம்பிகை தாயார் தேருக்கு எழுந்தருளினர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 4:10 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விநாயகர், முருகன், சண்டீகேஸ்வரர் சப்பரத்தில் வர, அதை தொடர்ந்து வீரசேகரர் பிரியாவிடை தேரும், உமையாம்பிகை தாயார் தேரும் நான்கு ரத வீதியில் வந்தது. வழிநெடுக பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.