பதிவு செய்த நாள்
23
ஜன
2012
11:01
ஆனைமலை : டாப்சிலிப்பில், வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட யானை பொங்கல் விழாவில், 13 யானைகள் அணிவகுத்து நின்றது, பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. ஒவ்வொரு ஆண்டும், தை மாதத்தில், யானைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த, யானை பொங்கல் விழா, டாப்சிலிப்பில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை, கலெக்டர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். யானைகளுக்கு பிடித்த கரும்பு, வெல்லம், வாழைப்பழம் போன்ற உணவுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பொங்கல் வைத்து, யானைகளுக்கு வழங்கப்பட்டன. அணிவகுப்பு நிகழ்ச்சியில், 13 யானைகள் பங்கேற்றன. பொதுமக்கள் கூறுகையில், ""அதிக அளவிலான யானைகளை, ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. யானைகள் என்றால், ஒருவித பயம் நம்மிடம் தொற்றிக் கொள்ளும். ஆனால், யானைகளை பார்த்த போது, மனிதர்களிடம் அன்பாக பழகுவதை தெரிந்து கொண்டோம்" என்றனர்.