* தோல்வியை கண்டு மனம் தளராதீர்கள். ஆயிரம் முறை வழுக்கி விழுந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒரு போதும் முயற்சியைக் கைவிடாதீர்கள். * சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு மதம் காரணமல்ல. மதத்தை முறையாக கையாளாமல் போனதே காரணம். * தீண்டாமையை கொள்கையாகவும், உணவை தெய்வமாகவும் கருதும் வரை ஆன்மிகத்தில் முன்னேற முடியாது. * பொறாமையை மட்டும் நீக்கிப் பாருங்கள், நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். * சுயநலம் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே உலகிற்கு தேவை. * உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. * உடலையும் மனதையும் பலவீனப்படுத்தும் எதையும் அணுகக் கூடாது. * உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது மிகப் பெரிய பாவம். * மனதை உயர்ந்த லட்சியங்களால் நிரப்பு. அதிலிருந்து நற்செயல்கள் மட்டுமே விளையும். * சுயநலமில்லாமல் இருப்பதும், சுயநலத்துடன் இருப்பதும் தான் கடவுளுக்கும் சாத்தானுக்கும் உள்ள வித்தியாசம். * எதை நினைக்கிறாயோ அதுவாக நீ ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். * நீ இப்போது இருக்கும் நிலைக்கு நீ மட்டுமே பொறுப்பு. * சோம்பேறித்தனம் எந்த வழியில் வந்தாலும் அதை துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு ‘எதிர்ப்பது’ என்பது பொருள். * பகை, பொறாமையை எவ்வளவு வெளிப்படுத்துகிறோமோ, அதை விட பன்மடங்கு பெருகி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பும். * பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல்களை செய்ய முடியாது. * வெற்றியை மட்டுமே சந்தித்தவன் இதயம் பூ போல மென்மை யானது. தோல்வியை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது. * இதயம் சொல்வதை மட்டுமே செய். வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டுமே உண்டு. * நீ பட்ட துன்பத்தை விட அதில் பெறும் அனுபவ பாடத்திற்கு முக்கியத்துவம் கொடு. * உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறப்பது கூடாது. * பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் யாரையும் வாழ விடாது; உண்மையோ சாக விடாது. * கீழ்ப்படியக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்தடையும். * எந்த குடும்பத்தில் பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அங்குள்ளவர்களின் முன்னேற்றம் தடைபடும். கட்டளையிடுகிறார் வீரத்துறவி விவேகானந்தர்