பதிவு செய்த நாள்
03
ஜூலை
2018
01:07
* ஜூன் 30 ஆனி 16: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் குதிரை வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், திருநெல்வேலி ராஜராஜேஸ்வரி வருஷாபிஷேகம்.
* ஜூலை 1 ஆனி 17: முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி விரதம், திருவோண விரதம், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தேர், காஞ்சிபுரம் வரதராஜர் ஜேஷ்டாபிஷேகம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் அனுமனுக்கு திருமஞ்சனம்.
* ஜூலை 2 ஆனி 18: திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சப்தாவர்ண சப்பரம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிதிருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் கருடாழ்வார் திருமஞ்சனம்.
* ஜூலை 3 ஆனி 19: மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேர், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* ஜூலை 4 ஆனி 20: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் ஊஞ்சல் சேவை.
* ஜூலை 5 ஆனி 21: முகூர்த்த நாள், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, சுவாமி மலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* ஜூலை 6 ஆனி 22: தேய்பிறை அஷ்டமி விரதம், கலிக்காம நாயனார் குருபூஜை, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ரங்கநாதர் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் ஊஞ்சல் சேவை, திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.