பதிவு செய்த நாள்
05
ஜூலை
2018
12:07
கோவிந்தவாடி: , குரங்குகளின் தொல்லை யால், பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி ஊராட்சியில், குரு கோவில் என அழைக்கப்படும், தட்சிணா மூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் இருக்கிறது. வியாழக்கிழமை தோறும், கோவிலுக்கு பக்தர்கள், தேங்காய், பூ, பழங்களை கொண்டு வருகின்றனர். அதை கோவில் வளாகத்தில் இருக்கும் குரங்குகள் பறித்து செல்கின்றன. இதனால், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களை கூட வீட்டிற்கு எடுத்த செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. குரங்குகளின் அட்டகாசத்தை தவிர்ப்பதற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குரங்குகளை பிடித்துச் செல்ல வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.