திருப்புவனம், -திருப்பாச்சேத்தி அருகே கானுாரில் மர்மநபர்கள் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். கானுாரில் இருந்து கருங்குளம் செல்லும் வழியில் இருளாயி அம்மன் கோயில் உள்ளது. கிராம மக்கள் விவசாய காலங்களில் இருளாயி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் கோயிலில் நுழைந்து இருளாயி அம்மன், இருளப்பர் சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் கதவையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.