சிவகங்கை, சிவகங்கை பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 64 வது பூச்சொரிதல் விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிவகங்கையில் நடைபெறும் விழாக்களில் முதன்மையானது பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா. இக்கோயிலின் 64 வது ஆண்டு பூச்சொரிதல் விழா நாளை (ஜூலை6) காலை 9:15 மணியளவில் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாலை 4:45 முதல் 5:45 மணிக்குள் பக்தர்கள் அம்மன் சன்னதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தெப்பக்குளத்தை அடைகிறனர். அங்கு பூக்கரகம் கட்டி, நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் தீச்சட்டிகள் எடுத்து வந்ததும், மாலை 6:00 மணியளவில் அம்மன் சன்னதி முன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஜூலை 13 ல் காலை 10:30 முதல் 12:00 மணிக்குள் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், தொடர்ந்து பூச்சொரிதல் விழாவும் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும், பிள்ளை தொட்டில் கட்டியும், மொட்டை போட்டும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் இளங்கோவன், பூஜாரி பூமிநாதன் செய்து வருகின்றனர்.