பதிவு செய்த நாள்
10
ஜூலை
2018
11:07
பெரியகுளம்: -பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் உள்ளது. மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் கவுமாரியம்மன் கோயிலும் ஒன்று. ஜூலை 3ல் கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நடந்தது.
நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நேற்று முதல் ஜூலை 18 வரை, பத்து நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. முக்கிய திருவிழாவான ஜூலை 17 ல் மாவிளக்கும், ஜூன் 18 ல் தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. தினமும் அம்மன் சிம்மம், ரிஷபம், அன்னபட்ஷி, குதிரை, யானை, புஷ்ப பல்லாக்கு, மின் ஒளி, பிரமோற்ஸவம் அலங்காரத்தில் வீதி உலா நடக்கும். தென்கரை வர்த்தக சங்கத் தலைவர் சிதம்பரசூரியவேலு, வர்த்தக பிரமுகர்கள் சீத்தாராமன், ராஜவேலு, அய்யாச்சாமி மற்றும் மண்டகப்படிதாரர்கள், தக்கார் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் அண்ணாதுரை, பூசாரிகள் துரைப்பாண்டி, காமுத்துரைப்பாண்டி, அருணாச்சலம் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.