பதிவு செய்த நாள்
11
ஜூலை
2018
12:07
பழநி, பழநி பெரியாவுடையார் கோயிலில், மாலையில் பிரதோஷ வேளையில் நந்திபகவான், மூலவருக்கும் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். இடும்பன்கோயிலில் ரிஷபவாகனத்தில் உள்ள சிவகிரிநாதர், உமாமகேஸ்வரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்தில், திருவுலா நடந்தது. மலைக்கோயில், பெரியநாயகியம்மன்கோயில், கைலாசநாதர், சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், நேதாஜிநகர் காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோயில், புதுநகர் சிவன் ஆகிய கோயில்களில் அபிஷேகம், பூஜைகள் நடந்தது.