திருப்பரங்குன்றம்: சோமப்பா சுவாமிகளின் 50 வது குருபூசை விழா 11.07.2018 புதன் கிழமை காலை திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலையில் (புசுண்டர்மலை) சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியாக 10.07.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில், திருவிளக்கு பூஜையும், தமிழிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
11.07.2018 காலை 10.00 மணியளவில் யாகசாலை பூஜை நிறைவுபெற்று, அருள்மிகு சோமப்பா சுவாமிகளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் மற்றும் அன்னம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தீபாராதனைகளுடன் குருபூசை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான அன்பர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்பர்கள் அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.00 மணியளவில் தமிழிசையும், இரவு 8.00 மணியளவில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் வழங்கும் “வள்ளி திருமணம்” பக்தி நாடகமும் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சூட்டுக்கோல் இராமலிங்க விலாசத்தின் மேனேஜிங் டிரஸ்டி இரா. தட்சணமூர்த்தி, 5ம் தலைமுறை சிறப்பாக செய்திருந்தார்.