பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
12:07
சந்தவாசல்: திருவண்ணாமலை அடுத்த, படவேடு ரேணுகாம்பாள் கோவிலில், ஆடி வெள்ளி விழா ஏற்பாடு, தீவிரமாக நடக்கிறது. இந்தாண்டு வாகனங்கள், கடைகளுக்கு, சுங்கவரி ரத்து செய்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த, படவேடு ரேணுகாம்பாள் கோவிலில், ஆடி மாதம் முழுவதும் விழா எடுப்பது வழக்கம். மேலும், ஏழு வெள்ளிக்கிழமைகளில் வெகு சிறப்பாக விழா எடுப்பது வழக்கம். இதனால், ஆடி மாதம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்வர். இதற்காக, மாவட்ட நிர்வாகம், பக்தர்களின் வசதிக்கு தூய்மைப் பணியில் ஈடுபட, 100 பேர் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை சார்பில், இரண்டு மருத்துவ முகாம்கள், பாதுகாப்புக்கு, இரண்டு தீயணைப்பு வாகனங்கள், பத்து நடமாடும் கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஏழு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், படவேடு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில், ஆட்டோ செல்ல அனுமதி கிடையாது. பாதுகாப்பு வசதிக்கு, 65 ’சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.