பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
12:07
சென்னிமலை: ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவிலாக, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்கிழமை மற்றும் அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி நாட்களில் அதிகம் பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திர விழா வெகு விமர்சையாக நடக்கும். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். அவ்வாறு வருவோர் தங்குவதற்கு, கோவில் சார்பில் விடுதி வசதியில்லை. இதனால், பக்தர்கள் தனியார் விடுதிகளை நாட வேண்டியதுள்ளது. கோவில் நிர்வாகம், தங்கும் விடுதி அமைத்து கொடுக்க, வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.