பதிவு செய்த நாள்
17
ஜூலை
2018
03:07
* ஜூலை 14 ஆனி 30: சந்திர தரிசனம், பிரதிவாதி பயங்கரம் அண்ணன் திருநட்சத்திரம், ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகனம், குறுக்குத்துறை சுப்பிரமணியர் வருஷாபிஷேகம், திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு, சிவானந்தர் நினைவு தினம்.
* ஜூலை 15 ஆனி 31: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவம் ஆரம்பம், ராமநாதபுரம் கோதண்டராமர் அனுமார் வாகனம், திருவண்ணாமலை அண்ணாமலையார் பவனி.
* ஜூலை 16 ஆனி 32: தட்சிணாயண புண்ணிய காலம், தீர்த்தக் கரைகளில் நீராடுதல், சதுர்த்தி விரதம், மாணிக்கவாசகர் குருபூஜை, ராமநாதபுரம் கோதண்டராமர் கருடவாகனம், மதுரை மீனாட்சி அன்ன வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம்.
* ஜூலை 17 ஆடி 1: சங்கரன்கோயில் கோமதியம்மன் ஆடித் தபசு உற்ஸவம் ஆரம்பம், மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி, நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி, திருவள்ளூர் வீரராகவர் புறப்பாடு, குரங்கணி முத்துமாலையம்மன் தீர்த்தம், ராமநாதபுரம் கோதண்டராமர் சேஷ வாகனம்.
* ஜூலை 18, ஆடி 2: சஷ்டி விரதம், குமார சஷ்டி, ராமநாதபுரம் கோதண்டராமர் திருக்கல்யாணம், மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி யானை வாகனம், சங்கரன்கோவில் கோமதி அம்மன் காமதேனு வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம், கரிநாள்.
* ஜூலை 19, ஆடி 3: மதுரை கள்ளழகர் ஆடி உற்ஸவம் ஆரம்பம், மீனாட்சியம்மன் ரிஷப சேவை, சங்கரன் கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனம், வடமதுரை சவுந்தர்ராஜர் உற்ஸவம் ஆரம்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* ஜூலை 20, ஆடி 4: சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனம், அழகர்கோவில் கள்ளழகர் கிருஷ்ணாவதாரம், மதுரை மீனாட்சியம்மன் கிளி வாகனம், ராமநாதபுரம் கோதண்டராமர் குதிரை வாகனம், வடமதுரை சவுந்தரராஜர் அன்ன வாகனம், சாரதாதேவியார் நினைவு நாள்.