ஒருமுறை பாதிரியார் ஒருவர் நாயகத்தை சந்திக்க வந்திருந்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். நடுவில், தனக்குரிய ஜெப நேரம் வந்து விட்டதால், தான் வெளியே போய் ஜெபம் செய்துவிட்டு வருவதாக பாதிரியார் புறப்பட்டார். அப்போது, “இதற்காக தாங்கள் இந்த கடும் வெயிலில் வெளியே போக வேண்டாம். இதோ, இந்த பள்ளிவாசலின் ஒரு பகுதியிலேயே உங்கள் பிரார்த்தனையை நடத்தலாம்,” என்று பாதிரியாரின் எண்ணத்தை மதிக்கும் விதத்தில் நடந்தார். “நற்செயலை அற்பமாகக் கருதாதீர்கள். உம் சகோதரரை மலர்ந்த முகத்துடன் சந்திப்பது கூட நற்செயலே ஆகும். உம் வாளியிலுள்ள தண்ணீரை உன் சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் கூட ஒரு நற்செயலே” என்பது நபிமொழி.