சில சமயங்களில், நாம் கடவுளை ஜெபித்தவுடன் கோரிக்கைகள் நிறைவேறி விடும். அந்த மகிழ்ச்சியில், கடவுளுக்கு நன்றி சொல்ல மறந்து விடுவோம். கடவுள் நமக்கு கொடுத்த பலனின் ஒரு சிறுபகுதியைக் கூட மற்றவர்களுக்கு தராமல் இருந்திருப்போம் இவையெல்லாம் பாவம் என்பதை நாம் உணர்வதில்லை. பலன்கள் வரிசையாக கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடுவோம். பாவங்களை வரிசையாக செய்வோம். இப்படியே, மேலும் மேலும் கோரிக்கைகளை கடவுளிடம் வைக்க வைக்க, அவரும் நிறைவேற்றி கொண்டே இருப்பார். ஒருமுறை, மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைப்போம். ஆனால் நம் ஜெபத்திற்கு பலனிருக்காது. “ஆண்டவரே! என்னை இப்படி சோதித்து விட்டீரே” என புலம்புவோம். ஏன் ஆண்டவர் இப்படி செய்தார் என நினைத்துப் பார்க்க வேண்டும். “நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் திரிய வேண்டும்?” என்று சொல்லுகிறேன்” என்ற வசனம் வருகிறது. இதுபோலவே புலம்புவோம். இதுபோன்ற சமயங்களில், நாம் செய்த பாவங்களின் பட்டியலைக் கணக்கிட வேண்டும். அதை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்டு, மீண்டும் அது போன்ற செய்யாமல் இருக்க உறுதி எடுக்க வேண்டும். இப்படி செய்தால் கர்த்தர் கருணை பொழிவார். நம் வாழ்வில் மீண்டும் வசந்தம் மலரும். துர்க்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்