என்ன தேவை: பச்சரிசி – 400 கிராம் தேங்காய் – 1 பாசிப்பருப்பு – 50 கிராம் உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
செய்வது எப்படி: பாசிப்பருப்பை அரைவேக்காடாக வேக வைத்து எடுக்கவும். அரிசியைக் களைந்து ஊற வைத்து நிழலில் உலர்த்தி மெஷினில் அரைத்து வறுத்து சலித்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். சலித்த மாவுடன் தேங்காய்த் துருவல், பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை கொழுக் கட்டைகளாகப் பிடித்து இட்லி போல ஆவியில் அவிக்கவும். சுவையான உப்புக்கொழுக்கட்டை தயார்.