பதிவு செய்த நாள்
25
ஜன
2012
11:01
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா பிப்.,7ல் நடக்கிறது. உற்சவ கொடியேற்றம் ஜன.,27 காலை 10 மணிக்கு நடக்கிறது.திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு அம்மனும், சுவாமியும் பல வாகனங்களில் உலா வருகின்றனர். ஜன.,27 காலை சிம்மவாகனம், இரவு 7 மணிக்கு சித்திரை வீதியில் அம்மன் சிம்ம வாகனம், சுவாமி கற்பகவிருட்ச வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். ஜன.,28ல் காலை 9 மணிக்கு தெற்குவாசலில் தங்கசப்பரம், இரவு சித்திரை வீதியில் அம்மன் அன்ன வாகனம், சுவாமி பூத வாகனம், ஜன.,29ல் காலை சித்திரை வீதியில் தங்க சப்பரம், இரவு அம்மன் காமதேனு வாகனம், சுவாமி கைலாசபர்வத வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.ஜன.,30ல் காலை 9 மணிக்கு நெல்பேட்டையில் தங்கசப்பரம், மாலை 6 மணிக்கு வெள்ளி சிம்மாசனம், ஜன.,31ல் காலை சித்திரை வீதியில் தங்க சப்பரம், இரவு அம்மன் சன்னதியில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். பிப்.,1ல் காலை சித்திரை வீதியில் தங்க சப்பரம், இரவு மாசி வீதிகளில் ரிஷப வாகனம், பிப்.,2ல் காலை சித்திரை வீதியில் சுவாமி பிச்சாண்டவர், இரவு அம்மன் தங்கப்பல்லாக்கு, சுவாமி தங்ககுதிரை, பிப்.,3ல் சித்திரை வீதியில் தங்கப்பல்லாக்கு, இரவு அம்மன் தங்கப்பல்லாக்கு, சுவாமி தங்ககுதிரையில் உலா புறப்படுகின்றனர். பிப்.,4ல் காலை சித்திரை வீதியில் எடுப்பு தேர், இரவு சப்தவர்ண சப்பரம், பிப்.,5ல் தெப்பக்குளத்தில் தங்கப்பல்லாக்கு, இரவு அம்மன் சன்னதியில் ரிஷபவாகனம், பிப்.,6ல் காலை சிந்தாமணியிலும், இரவு அம்மன் சன்னதி தெருவிலும் தங்கப்பல்லக்கில் எழுந்தருளுகின்றனர். பிப்.,7ல் அதிகாலை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, தெப்பக்குளத்தில் எழுந்தருளுகிறார். காலையில் இருமுறையும், இரவு ஒரு முறையும் தெப்பத்தில் உலா வருகின்றனர். அன்று அம்மனும், சுவாமியும் உற்சவம் முடிந்து கோயிலுக்கு திரும்பும் வரை நடைசாத்தப்பட்டிருக்கும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி ஜெயராமன் செய்து வருகின்றனர்.