லிங்கத்தை தேவிகம், திவ்யம் ஆர்ஷம், மானுஷம், ராட்சஸம், பாணம் என, அவை உண்டான காரணத்தைக்கொண்டு ஆறு வகையாகக் கூறுவர். அரூபியாகிய இறைவன் ரூபாரூபமாகிய சிவலிங்க வடிவில் தோன்றி, பின் மகேசுவரன் முதலிய உருவத் திருமேனிகள் உற்பவிக்கக் காரணமாகிறான். அணுவுக்குள் அணுவாக எவ்விடத்தும் விளங்கும் எலக்ட்ரானைப் பரிசோதித்துப் பார்த்ததில், பச்சை நிறமான ஒரு வட்டத்தின் நடுவில் ஒரு ஜோதி விளங்கக் கண்டுள்ளார்கள். இப்பச்சை வடிவம் ஆவுடையினையும், ஜோதிவடிவம் சிவலிங்கத்தினையும் போன்றுள்ளன. ஆகவே, எலக்ட்ரான் வியாபித்த உலகமெங்கும் சிவலிங்க வடிவம் தோன்றுவதாலும், இறைவன் கொண்ட அருவுருவத் தோற்றம் சிவலிங்க வடிவமெனத் தெளியலாம்.