திருச்சியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள துறையூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு எட்டே முக்கால் அடி உயரத்தில் பெரிய நாயகி அம்மன் எழுந்தருளியுள்ளாள். இச்சன்னதி வாசலில் பேச்சியம்மன் மடியில் குழந்தையுடன் காட்சி தருகிறாள். மழலை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் இவர்களை வழிபட்டுச் செல்கின்றனர். பிரசவிக்க சிரமப்பட்ட ஓர் அரசியின் வயிற்றைக் கிழித்து, குழந்தையை தொப்புள் கொடியுடன் பேச்சியம்மன் வெளியே எடுக்கும் காட்சி பிராகாரத்தில் கதையாலான சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு.