ராமநாதபுரம்:ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயில் ஆனி பிரமோற்ஸவ விழா ஜூலை 12 அனுக்கையுடன் துவங்கியது. விழா நாட்களில் காலையில் சுவாமி பல்லக்கு, இரவில் தோளுக்கினியான், சிம்மம், ஆஞ்சநேயர்,கருட, சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிேஷக ஆராதனைகளும் நடந்தது. ஆறாம் நாளான நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று மஞ்சள் நீர் இரவு இந்திர விமானம் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) பல்லக்கு, குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு மேல் தீர்த்தோற்ஸவமும், இரவு தோளுக்கினியான் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.