பதிவு செய்த நாள்
20
ஜூலை
2018
01:07
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் பக்தரிடம் நீராட, பூஜை, தங்கும் விடுதியில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். ராமேஸ்வரம் கோயில் அலுவலகத்தில் ராமநாதபுரம் டி.ஆர்.ஓ., முத்துமாரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கோயிலில் நீராடி, தரிசிக்கவும், அக்னி தீர்த்த கரையில் பூஜை செய்யவும், லாட்ஜ்களிலும் நிர்ணயித்த கட்டணத்தை விடகூடுதலாக வசூலிப்பதாக பலமுறை புகார் வருகிறது. ஆகையால் யாத்திரை பணியாளர்கள், புரோகிதர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. மேலும் கட்டணம், வாடகை விபரம் அடங்கிய பட்டியலை(மூன்று மொழியில்) கோயில் வாசல், அக்னி தீர்த்த கரை, லாட்ஜில் விரைவில் வைக்க வேண்டும். இதனை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஆர்.ஓ., தெரிவித்தார். கூட்டத்தில் கோயில் இணை ஆணையர் மங்ககையர்கரசி, போலீஸ் டி.எஸ்.பி.,மகேஷ், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் முத்துராமன், நுகர்வோர் இயக்க செயலர் களஞ்சியம், லாட்ஜ் உரிமையாளர் சங்க செயலர் நாகராஜ் பலர் பங்கேற்றனர்.