பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
02:07
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே, அக்கரைப்பட்டி பச்சியம்மன் கோவில் தேரோட்டம் ஆக., 3ல் நடைபெறவுள்ளது. இதற்காக, இடைப்பாடியில் இருந்து சுவாமி சிலைகள் எடுத்து செல்லப்பட்டன. கொங்கணாபுரம் அருகே, அக்கரைப்பட்டி, புதுக்குடியானூர், வெள்ளாளபுரம் ஆகிய பகுதிகளுக்கு சொந்தமான பச்சியம்மன் கோவில் உள்ளது. தேரோட்டம் ஆண்டுதோறும் ஆடி, 18ல் நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில், ஐம்பொன்னாலான அம்மன் சிலைகள் இரண்டும், ஒரு விநாயகர் சிலையும் உள்ளது. இந்த சிலைகளை வைத்துக் கொள்வதில், மூன்று கிராம மக்களிடையே, 10 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அறநிலையத்துறை அதிகாரிகள், சிலைகள் இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் வைப்பது எனவும், திருவிழாவுக்கு மட்டும் எடுத்து செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று மூன்று கிராமங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மக்கள் இடைப்பாடிக்கு வந்து, ஐம்பொன்னாலான அம்மன் சிலைகள் இரண்டு, ஒரு விநாயகர் சிலையை எடுத்து சென்றனர்.