பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
02:07
கரூர்: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. ஆடி வெள்ளிக்கிழமை கரூர் பகுதி அம்மன் கோவில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பசுபதிபுரம் வேம்புமாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு, அம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் அதன் பின், சிறப்பு பூஜை நடந்தது. காலை முதல் இரவு வரை, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஜவஹர் பஜார் மாரியம்மன் கோவிலில், காலை அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதன் பின் சிறப்பு பூஜை நடந்தது. காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காந்திகிராமம் மாரியம்மன் கோவில், சின்னாண்டாங்கோவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று மதியம் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இதில் லாலாப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.