பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
02:07
ஈரோடு: ஈரோடு, வில்லரசம்பட்டி, செம்மாம்பாளையம் மஞ்சள் வணிக வளாகத்தில் உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், உலக நலத்துக்காக மகா ருத்ர யாகம், சத சண்டி மகா யாக பெருவிழா, கடந்த, 16ல் துவங்கியது. கிராம சாந்தி, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ?ஹாமம் நடந்தது. தொடர்ந்து தினமும் காலை, கோ பூஜை, யாகங்கள், தீபாராதனை நடக்கிறது. நேற்று ருத்ர ஜப பாராயணம், ருத்ர ?ஹாமம், ருத்ர திரிசதி பஞ்சமுக அர்ச்சனை நடந்தது. வரும், 23ல் மகா சண்டி ?ஹாமம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.