பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
02:07
திருப்பூர்;ஆடி வெள்ளியை முன்னிட்டு, இந்து அன்னையர் முன்னணி சார்பில், தீர்த்தக் குட ஊர்வலம், நேற்று நடந்தது. திருப்பூர் இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 3ம் ஆண்டு தீர்த்த குட ஊர்வலம் நடந்தது. கரட்டாங்காடு, மாகாளியம்மன் கோவிலிருந்து, நுாற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாலிகையும், ஐநுாறுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் குடம் எடுத்தும் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்து முன்னணி மாநில தலைவர் ’காடேஸ்வரா’ சுப்ரமணியம் தலைமை வகித்தார். ரேணுகாதேவி ஊர்வலத்தை துவங்கி வைத்தார். ரமணி, சரோஜா, தீபப்பிரியா சாந்தினி, அருணா முன்னிலை வகித்தனர். மேள தாளம் முழங்க, ஊர்வலம் முக்கிய ரோடுகள் வழியாக, கோட்டை மாரியம்மன் கோவில் சென்றடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியன நடந்தது. இந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிேஷார் குமார், செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன், பா.ஜ., தெற்கு தொகுதி பொறுப்பாளர் தங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள், சித்ரா, நிர்மலா, அம்பிகா, சரோஜா தேவி, இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.