கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில், வேப்பமரம் அருகே அமைந்துள்ள நாகம்மன் கோவிலில் வழிபாடு, சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வேப்பமரம் அடியில் நாகம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அமைக்கப்பட்டு, ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு, அப்பகுதி பெண்கள் வேப்பமரம் நாகம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தினர். இதில், சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நாகம்மனை வழிபட்டனர்.