பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
01:07
கோவிந்தவாடி: கோவிந்தவாடி, மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழா நேற்று, விமரிசையாக நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம், ஆடி திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்த திருவிழாவை முன்னிட்டு, 19ம் தேதி, ஏகாத்தம்மாளுக்கு, பெண்கள் பொங்கலிட்டனர். தொடர்ந்து, 20ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் பகல், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு அம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவிந்தவாடி கிராம மக்கள் செய்தனர்.