பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
01:07
மோகனூர்: மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில், செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 28ல் துவங்கியது. கடந்த, 4ல், சுவாமி தேரில் ரதம் ஏறிய பின், வாழவந்தியில் மாவிளக்கு பூஜை, எல்லை உடைத்தல், ஊமைப் புலி குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அதையடுத்து, 18 ஊர்களுக்கு, தேர் எடுத்துச் சென்று பூஜை செய்யப்பட்டது. நேற்று முன்தினம், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, சுவாமி குடிபுகும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.