கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 161ம் ஆண்டு அவதார விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2018 02:07
கட்டிக்குளம்: 1858 -ம் ஆண்டு ஆடி மாதம் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதரித்ததை முன்னிட்டு 26.07.2018 வியாழக்கிழமை அன்று காலை 7.31 மணிக்குமேல் 9.00 மணிக்குள் கட்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அவதார இல்லம் பட்டமான். கருப்பனேந்தல் மடம் தவச்சாலையில் அமைந்துள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் முதலாவது ஜீவ ஒடுக்கமான இடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பேரன் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் அவதார இல்லம் பரம்பரை தர்ம கர்த்தாவும், கருப்பனேந்தல் மடத்தின் பரம்பரை கோயில் ஸ்தானிகர், மா.க. குருசாமி சிவாச்சாரியார் மகன்கள் முன்னிலையிலும் மற்றும் சிவாச்சாரியார்களால் சிறப்பு வேள்வி யாகமும், பூர்ணாஹூதி பூஜை அபிஷேக ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெறுகிறது.