பதிவு செய்த நாள்
27
ஜன
2012
11:01
கோவை : ஸ்ரீ நாகசக்தி அம்மன் சமூக ஆன்மிக அறக்கட்டளை சார்பில், வரும் பிப்.,12ம் தேதி 1008 பால் குட, மஞ்சள் குட ஊர்வலம் மற்றும் நீராட்டு விழா நடக்கிறது. நடப்பாண்டு சர்வதேசத்தில் பேரழிவு ஏற்படும் என்று, மக்கள் இடத்தில் ஏற்பட்டுள்ள மன அச்சத்தை போக்க வேண்டியும், சமத்துவம், விவசாயம், தொழில் வளம், மலைவளம், மக்கள் ஒருவருக்கொருவர் அன்புடன், சமாதானத்துடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டியும், ஸ்ரீ சிவசண்முக சுந்தர பாபுஜீ சுவாமிகள் தலைமையில் இவ்விழா நடக்கிறது. இவ்விழா சிறப்பாக நடைபெற, 1008 பக்தர்களுக்கு, இன்று முதல், ஸ்ரீ நாக சக்தி அம்மனுக்காக, மாலை அணிந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பக்தர்கள் 1008 குட ஊர்வலம், கொடி ஊர்வலம், ஸ்ரீ நாகசக்தி அம்மன் திரு வீதி ஊர்வலம் ஆகியவற்றில் பல பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.அன்னதான விழா நடக்கிறது.