பதிவு செய்த நாள்
27
ஜன
2012
11:01
வீரவநல்லூர்: திருப்புடைமருதூர் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் வரும் 29ம் தேதி நடக்கிறது.தல சிறப்பு பெற்ற திருப்புடைமருதூர் கோமதிஅம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, காலை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சிகளாக பிப்.6ம் தேதி தேரோட்டம், 7ம் தேதி முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன், சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்பையா முன்னிலையில் தைப்பூச தீர்த்தவாரி நடக்கிறது. நிகழ்ச்சியில் நெல்லை எம்.பி.,ராமசுப்பு, மாவட்ட கலெக்டர் செல்வராஜ், அம்பை எம்எல்ஏ சுப்பையா, நெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், மதுரை தியாகராஜா மில்ஸ் நிர்வாக இயக்குனர் கருமுத்து தி.கண்ணன், கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி ராமசாமி, முத்தையாபாண்டியன், பஞ்., தலைவர் முத்துஐயப்பன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் ஏமையா, ஆய்வாளர் சுப்புலெட்சுமி செய்து வருகின்றனர்.