பதிவு செய்த நாள்
26
ஜூலை
2018
12:07
கூரம் : கூரம் சாமாத்தம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா, மூன்று நாட்கள் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், சாமாத்தம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் நடக்கும் மூன்று நாள் திருவிழா, 22ம் தேதி, பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.அன்று மாலை, கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டனர். திங்களன்று கன்னியம்மன் உற்சவம் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று முன்தினம், பகல் கூழ்வார்த்தலும், மாலை, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் வீதியுலா நடந்தது.கூரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர். = உத்திரமேரூர் அடுத்த, ஆதவப்பாக்கத்தில், எல்லையம்மன் கோவில் ஆடி மாத கூழ்வார்த்தல் திருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.