கரூர்: அனுமந்தராய பெருமாள் கோவிலில், மூலம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. க.பரமத்தி அடுத்த புன்னம் பஞ்சாயத்து, பாசுபதிபாளையம் அனுமந்தராய பெருமாள் கோவிலில், ஆஞ்சநேயருக்கு மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட, 18 வகை திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மேலும், சிறப்பு அலங்காரத்தில் அனுமந்தராய பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.