குற்றாலம்:குற்றாலம் கன்னி விநாயகர் கோயிலில் நாளை (28ம் தேதி) வருஷாபிஷேகம் நடக்கிறது.குற்றாலம் ராமலாயம் காலனி கன்னிமாரம்மன் உடனுறை கன்னி விநாயகர், கன்னி மாரியம்மன், பைரவர் கோயிலில் நாளை (28ம் தேதி) வருஷாபிஷேகம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், துர்கா ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடக்கிறது.மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் வழிபாட்டு அறக்கட்டளை தலைவர் சிவாஜி மற்றும் விழா கமிட்டியார் செய்துள்ளனர்.