பதிவு செய்த நாள்
27
ஜன
2012
11:01
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா வரும் 29ம் தேதி நடக்கிறது.காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா வரும் 29ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி நாளை (ஜன.,28) காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமம், மஹாலட்சமி ஹோமம், கோ பூஜை, தீபாராதனையும், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, ரட்ஷாபந்தனம், முதல் கால யாகபூஜையும், இரவு 9 மணிக்கு வேதநாயகி அம்மன் விமானத்தில் கலசம் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 29ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், நாடி சந்தானமும், மகா பூர்ணாஹதி தீபாராதனையும், கடம் புறப்பாடும் நடக்கிறது. 8 மணக்கு மேல் 9 மணிக்குள் பெண்ணேஸ்வரர் சமேத வேதநாயகி அம்மன் ராஜகோபுரம் மற்றும் பரிவாரன மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.சிவாச்சாரியார்கள் திருச்சி சண்முகம், தீர்த்தமலை கார்த்திகேய சிவம் ஆகியோர் மஹா கும்பாபிஷேக விழாவை நடத்தி வைக்கினறனர். உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். 10.30 மணிக்கு மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 30ம் தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை தொழிலதிபர்கள் சுப்பிரமணியன், சுவாமிநாதன், செயல் அலுவலர் முருகன், கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.