பதிவு செய்த நாள்
27
ஜன
2012
11:01
தென்காசி:மேலப்பாவூர் தங்கம்மன் கோயிலில் வரும் 29ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.மேலப்பாவூர் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தங்கம்மன், நூதன புது ராஜகோபுரம், கன்னி விநாயகர், பலிபீடம், பைரவருக்கு வரும் 29ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று (27ம் தேதி) யாகசாலை பூஜை துவங்குகிறது. இன்று காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடக்கிறது.மாலையில் மகா கணபதி ஹோமம், மகா சங்கல்பம், ஊர் தாம்பூலம், தீர்த்த அழைப்பு, சிவன் கோயிலில் இருந்து தீர்த்த சங்கரணம், பாலிகை பூஜை, மிருத்தி சங்கரணம், ரட்க்ஷõபந்தனம், கலா ஆகர்ஷணம், யாகசாலை வேதிகா பூஜை, மண்டபராதனை, ஜெபம், திரவியாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடக்கிறது.
நாளை (28ம் தேதி) காலையில் இரண்டாம் கால பூஜை, வேத பாராயணம், மூல மந்திர ஜெபம், வேதிகா பூஜை, மகா பூர்ணாகுதி, மாலையில் யாகசாலை பூஜை, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மந்திர புஷ்பம், தேவாரம் நடக்கிறது. 29ம் தேதி காலையில் யாகசாலை பூஜை, சோம கும்ப பூஜை, பிம்பசுத்தி, சுவாமி அம்பாள் ரக்ஷ்ஷாபந்தனம், நாடி சந்தனம், ஸ்பர்சாகுதி, மகா பூர்ணாகுதி நடக்கிறது.காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கடம் புறப்பாடு, யாத்ரா தானம், விமானம் மூர்த்திகளுக்கு திரவ்ய அபிஷேகம், மகா அபிஷேகம், அலங்கார சிறப்பு தீபாராதனை, மகா புனரோத்தாரண, நூதன ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம், அலங்கார அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை விழா கமிட்டியார் மற்றும் தேவர் சமுதாயத்தினர் செய்துள்ளனர்.