பதிவு செய்த நாள்
26
ஜூலை
2018
04:07
மாமதுரைச் சீமையின் பெயர்கள் திருக்கோயிலை மையமாக வைத்து ஏற்பட்ட காரணத்தால் இலக்கிய புராண அனைத்து வரலாறுகளிலும், ஒரேமாதிரி பெயர்களே விளங்குகின்றன. அதேசமயம் திருஆலவாய் என்றே தேவாரத்திருவாசகங்களின் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
1. திருஆலவாய், 2. கடம்பவனம், 3. கன்னிபுரீசம், 4. கம்பலைமூதூர், 5. சமஷ்டி விச்சாபுரம், 6. சிவநகரம், 7. சிவராஜ தானி, 8. துவாதசாந்தபுரம், 9. தென்கூடம்,
10. தென்மதுரை, 11. நான்மாடக்கூடல், 12. நெடுமாடக்கூடல், 13. பூலோககைலாஸம்,
14. பூலோகசிவலோகம், 15. மதுரை, 16. மருதை, 17. மதுராபதி, 18. மதுராபுரி,
19. விழாமலிமூதூர், 20. ஜீவன்முக்திபுரம்.
உலகின்யாவற்று லிங்கத் தோற்றங்கட்கும் முந்தயதும் மூலலிங்கமெனவும் போற்றப்படும் இத்தலம். முக்தித்தலங்களில் ஒன்றாகவும், விளங்குவதோடு, இறைவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், நம் மதுரை விளங்குகின்றது.
7. (அ) அப்பன்திருவாலவாயனின் விளங்கு பெயர்கள்
1. திருவாலவாயுடையார், 2. அட்டாலைச்சேவகன், 3. அடியார்க்குநல்லான்,
4. அதிரவீசிஆடுவான், 5. அபிஷேகச்சொக்கன், 6. அபிராமசுந்தரர், 7. ஆலவாய்அரசன்,
8. இறையனார், 9. கடம்பவனேசர், 10. கர்பூரசுந்தரர், 11. கல்யாண சுந்தரர், 12. கூடல்நாயகன், 13. சுந்தரர், 14. சுந்தரபாண்டிய சோழக்கோனார், 15. சொக்கநாதா, 16. சொக்கேசர்,
17. சோமசுந்தரர், 18. சொக்கலிங்கம், 19. செண்பகசுந்தரர், 20. புழுகுநெய்ச்சொக்கர்,
21. பேராலவாயர், 22. மதுரைப்பெருவுடையார், 23. மதுரேசர், 24. மூலலிங்கேசர்.
7. (ஆ) அன்னை மீனாக்ஷியின் விளங்கு பெயர்கள்
1. அங்கயற்கண்ணி, 2. அபிஷேகவல்லி, 3. ஆளுடைநாச்சியார், 4. கயற்கண்குமரி,
5. குமரித்துறையவள், 6. தமிழ்ப்பெருமாட்டி, 7. திருக்காமத்துக்கோட்டத்து ஆளுடைநாச்சியார்,
8. பங்கையற்செல்வி, 9. பாண்டிபிராட்டி, 10. மாணிக்கச்செல்வி, 11. மதுராபுரிஅரசி, 12. மரகதவல்லி, 13. மதுரைமீனாக்ஷி.
வேத மந்திரப்பெயர்கள்:
1. மகாசோடசி, 2. புவனை, 3. மாதங்கி, 4. பஞ்சதசாட்ஷரி, 5. பாலை, 6. சியாமளை, 7. சுகசியாமளை, 8. சோடசி, என எண் பெயர்களுடன், மணோன்மணி, மந்திரிணி, ராஜ மாதங்கி எனவும் பல்வேறு மந்திரப் பெயர்களை தாங்கி நிற்பவள் ஆவாள் அன்னை ஸ்ரீ மீனாக்ஷி. இப்பெருமாட்டி இறைவனுடன் இரண்டறக் கலந்த வாம பாகத்தே பாகம் பிரியாளாய் என்றும் பிரியாதிருப்பவளாய் பிரியா விடை என்ற பெயருடன் ஐக்கியமாய் இருக்கிறாள். அவளினின்றும், சிவத்தினின்றும் இரு கூறுகளாய் மீனாக்ஷி சோமசுந்தரர் என்ற அம்சபந்தமாக திகழ்கிறார்கள். இதனைச் சுருக்கிக் கூறுவதென்றால்,
பிரியாவிடை என்றால் - ஐக்கிய பந்தம் எனவும்
ஸ்ரீ மீனாக்ஷி என்றால் - அம்ச பந்தம் எனவும் ஒருவரே இரண்டு தத்துவப் பெயர்களில் திகழ்கின்றார்கள். இம்மதுரை மண்ணில் இறைவனும் இறைவியும் மண்ணில் இறங்கி வந்து அவர்களில் மேலான கருணையாய் இம்மதுரையினை நித்தமும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திருவாலவாய் ஸ்ரீ மீனாக்ஷியை என்றென்றும் நெஞ்சில் நிறுத்தி வாழ்த்தித் துதிப்போம்.