விருத்தாசலம்: பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தையொட்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. விருத்தாசலம், பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில் 36ம் ஆண்டு செடல் உற்சவம், கடந்த 22ம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக நேற்று திருவிளக்கு பூஜையையொட்டி, மாலை 4:00 மணியளவில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 108 சுமங்கலி பெண்கள் விளக்கேற்றி, குங்கும பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். வரும் 3ம் தேதி செடல் உற்சவம், 5ம் தேதி ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து தாய் வீட்டு சீதனம் கொண்டு வரும் ஐதீக நிகழ்வுடன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.