தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம் நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கடந்த 16 ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. கடந்த 24 ம் தேதி திருத்தேரோட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு அபிேஷக பூஜைகளும், பரிவார மூர்த்திகளுக்கு ஆராதனைகளும் நடந்தது. பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு அர்த்தமண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகளும் மகாதீபாராதனையும் நடந்தது. நாகராஜ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் அர்ச்சனைகள் செய்தனர். செங்குந்தர் சமூகத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நேற்று ஊஞ்சல் உற்வசத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.