பதிவு செய்த நாள்
28
ஜன
2012
11:01
புதுச்சேரி:உலக முத்து மாரியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது. புதுச்சேரி பாரதி வீதி கழுத்து மாரியம்மன் என்ற உலக முத்து மாரியம்மன் கோவிலில் 108 பால்குடம் அபிஷேகம் மற்றும் புதிய திருக்கோவில் கட்டுவதற்கு அம்மனிடம் உத்தரவு கேட்டல் விழா நேற்று நடந்தது.முன்னதாக காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, நவகலச ஸ்தாபனம் நடந்தது. பின் கணபதி ஹோமம், பஞ்ச அஸ்த்ர ஹோமமும், அதனைத் தொடர்ந்து 108 பால் குட திருவீதியுலா நடந்தது. முன்னதாக கஜ பூஜையும், அதைத் தொடர்ந்து மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி அணி வகுக்க, 108 பால்குட திருவீதியுலா நடந்தது. முடிவில் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.மதியம் கூழ், கஞ்சி வார்த்தல், தயிர் அன்னம் படைத்தலும், நவசக்தி அர்ச்சனையும் நடந்தது. மாலை 7 மணிக்கு, அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி சித்ரான்னம் இட்டு, நீர், மோர் பானகம் நெய்வேத்தியம் செய்து, அம்மனிடம் புதிய திருக்கோவில் கட்டுவதற்கு உத்தரவு கேட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சோடசோப தீபாராதனை நடந்தது.விழாவில், அறங்காவலர் குழு துணைத் தலைவர் ஏழுமலை, செயலாளர் சுந்தர், பொரு ளாளர் ரவி (எ) சண்முகசாமி, உறுப்பினர் கோவிந்தராஜ், ஆலய அர்ச்சகர் கார்த்திகேயன் குருக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.