பதிவு செய்த நாள்
28
ஜன
2012
10:01
பழநி : பழநி கோயில் நிர்வாகத்தின் அதிரடி ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு பக்தர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறைகளின் "சொதப்பல் நடவடிக்கையால் பக்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பழநியில், நான்கு கிரி வீதிகள், சன்னதிரோடு, பஸ் ஸ்டாண்ட், திண்டுக்கல்,காந்திமார்க்கொட், ஆர்.எஸ்.,ரோடுகள் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள், பக்தர்களுக்கு சிரமத்தை எற்படுத்தி வந்தன. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையால், நேற்று கோயில், நகராட்சி பகுதிகளில் அகற்றல் பணி நடந்தது. முன்னாத அகற்றம் தொடர்பாக ஆட்டோ, தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்பட்டு இருந்தன. கிரி வீதிகளில் பழநி கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் முன்னிலையில் அகற்றல் பணி நடந்தது. இதுவரை, அகற்றத்தின் போது ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திரை சீலையை தொங்கவிட்டு கடையை அடைத்து சென்று விடுவர். பின்னர் வழக்கம் போல் திறந்து ஆக்கிரமித்து, வியாபாரம் ஜோராக நடக்கும். ஆனால் நேற்று பூட்டியிருந்த கடைக்காரர்களுக்கும் இணை கமிஷனர் பாஸ்கரன் மைக் மூலம் இரண்டு மணி நேரம் அவகாசம் அளிப்பதாக எச்சரித்தார். இடதையடுத்து பெரும்பாலான கடைக்காரர்கள் தாங்களாகவே, பொருட்களை மூட்டை முடிச்சுகளாக கட்டி எடுத்து சென்றனர். இருப்பினும் அகற்றத்திற்கான ஜே.சி.பி.,இயந்திரம் வருவதில் செயற்கையாக தாமதம் ஏற்ப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களின் கைங்கர்யத்தால், உள்ளூர் ஜே.சி.பி., இயந்தி உரிமையாளர்கள் வாகன்ஙகளை அனுப்புவதில் தாமதம் காட்டினர். காலை 11.30 மணிக்கு புறநகர் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. அடிவாரம் ரோடு, கிரி வீதிகளில் ஆக்கிரமிப்பு இல்லாததால் பக்தர்கள் நேற்று மாலை நிம்மதியாக கிரி வலம் செல்ல முடிந்தது. எஞ்சிய பகுதிகளில் இன்று, ஜன.,28-ல் அகற்றம் நடக்க உள்ளது. இந்நிலையில், நகராட்சி, நேடுஞ்சாலைத்துறையினர் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அகற்றும் பணியில், "அரசியல் காட்டினர். பழநி நகர் பகுதியில், பெயரளவு அகற்றத்தால் பக்தர்களின் பரிதவிப்பு இன்னும் மாறவில்லை.