பதிவு செய்த நாள்
28
ஜன
2012
11:01
சென்னை: விஞ்ஞானம் - ஆன்மிகம் - சமூக சேவை குறித்த கருத்தரங்கு, இன்று துவங்குகிறது.பூரண தத்துவ சபை சார்பில், விஞ்ஞானம் - ஆன்மிகம் - சமூக சேவை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு, அண்ணா சாலை, தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில், இன்று துவங்குகிறது. காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை நடக்கும் இக்கருத்தரங்கை, பச்சையப்பன் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் குணசேகரன் துவக்கி வைக்கிறார். சபையின் நிறுவனர் சத்தியநாராயணன், சபையின் நோக்கங்கள் குறித்து விளக்குகிறார்.தொல்லியல் துறை முன்னாள் தலைவர் தியாக.சத்தியமூர்த்தி, "தொல்லியலும், விஞ்ஞானமும் எனும் தலைப்பில், சிறப்புரையாற்றுகிறார். "அறிவியல் கோட்பாடுகளுக்கு பின்னுள்ள சமய உண்மைகள், "அன்பே கடவுள் எனும் தலைப்புகளிலும், அறிஞர்கள் உரையாற்றுகின்றனர்.