பதிவு செய்த நாள்
01
ஆக
2018
12:08
கிருஷ்ணகிரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோடு சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபி?ஷகம் செய்யப்பட்டது. பின், ராஜ அலங்காரத்தில் சுவாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பெண்கள், நெய் விளக்கேற்றி, சுவாமி தரிசனம் செய்தனர்.
* தர்மபுரி எஸ்.வி., ரோடு, சாலைவிநாயகர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு, பால், சந்தனம், குங்குமம், இளநீர், தயிர், பழம், தேன் ஆகியவற்றால் அபி?ஷகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த உற்சவர் ஊர்வலம், எஸ்.வி., ரோடு, கடைவீதி, காந்தி சாலை, வெளிப்பேட்டை தெரு, சுண்ணாம்புகார வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.