பதிவு செய்த நாள்
03
ஆக
2018
01:08
ஆற்காடு: உச்சநீதிமன்றம் வழங்கிய, கால அவகாசத்திற்குள், சிலைகள் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும், என, தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த, ரத்தினகிரியில், நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும், 4,500க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபி?ஷகம் செய்யப்பட்டுள்ளது. பல கோவில்களில், திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபி?ஷகம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் விசாரணைக்குழு குறித்த வழக்கு, தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், அது குறித்து, கருத்து தெரிவிக்க முடியாது. தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அனைத்து பிரிவினரும் அர்ச்சகராகலாம், என்ற புதிய திட்டத்தின் கீழ், மதுரையில் நியமித்ததை போன்று, மற்ற இடங்களில் படிப்படியாக நியமிக்கப்படுவர். உச்சநீதிமன்றம் விதித்த கால கெடுவுக்குள், கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டி முடிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.