சின்னமனுார்: தேனிமாவட்டம் குச்சனுாரில் நடந்த சனீஸ்வரர்- நீலாதேவி திருக்கல்யாணம் நடந்தது. ஆடி சனிவார பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் நேற்று மதியம் 12:40 மணிக்கு நடந்தது.
தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து மங்களநாண் பூட்டினார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். சுயம்பு மூலவருக்கு உருவம் கிடையாது. பரம்பரை அர்ச்சகர்கள் மஞ்சளுடன் மூலிகை கலந்து அனுகிரக மூர்த்தியாக உருவம் கொடுப்பர். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மஞ்சனக்காப்பு சாத்துபடி இன்று இரவு 12:00க்கு துவங்குகிறது. இதற்காக மஞ்சள், நல்லெண்ணெய், படிகாரம், மூலிகைகள் கலந்த கலவை தயார் நிலையில் உள்ளது. . நாளை அதிகாலையில் நடக்கும் சிறப்பு பூஜையில் மஞ்சனக்காப்பு அலங்காரத்தில் அனுகிரக மூர்த்தியாக மூலவர் அருள்பாலிப்பார். அடுத்த ஆண்டு மூன்றாவது ஆடி சனிவாரத்திருவிழா நிறைவடையும் வரை நல்லெண்ணெய் பூசி, மஞ்சனக்காப்பு பாதுகாக்கப்படும்.