விருதுநகர்: விருதுநகர் கச்சேரி ரோட்டில் சோலை குடும்பன் வகையறாக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் புதிதாக கட்டபட்டு வருகிறது. நேற்று காளியம்மன், விநாயகர், ஆஞ்சநேயர் சிலைகள் உருவேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சுவாமி சிலைகள் மேளதாளத்துடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுத்தலைவர் ரவீந்திரன், டிரஸ்டிக்கள் சிவகுரு நாதன், கோவிந்தன் செய்தனர்.