பதிவு செய்த நாள்
30
ஜன
2012
12:01
திருநெல்வேலி : மேலப்பாளையம் பாரதியார்புரம் காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. மேலப்பாளையம் பாரதியர்புரத்தில் காளியம்மன் கோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் நடத்தப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 27ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. மாலையில் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், வேதபாராயணம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, இரவு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இரவில் யந்திரஸ்தாபனம், ரத்னஞ்யாசம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம் நடந்தது. கும்பாபிஷேக விழாவான நேற்று காலையில் நான்காம் கால யாகசாலை பூஜைகள், வேதபாராயணம், ஸ்பர்சாகுதி, திரவ்யாருதி, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடந்தது. காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள், பஞ்ச வாத்தியங்கள் முழங்க, திருமுறைகள் பாடப்பட கன்னி விநாயகர், விமானம் மற்றும் மூலஸ்தான மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகாபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. மதியம் மகேஸ்வர பூஜைகள், அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேகத்தை வெங்கடாச்சலம் சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்திவைத்தனர். ஏற்பாடுகளை பத்ரகாளி அம்மன் கோயில் திருப்பணிக்குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞரணி, மகளிரணியினர் செய்திருந்தனர்.